• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓராண்டிற்கு பிறகு தாய்லாந்து மன்னரின் உடல் தகனம்

October 26, 2017 தண்டோரா குழு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறந்த தாய்லாந்து நாட்டின் மன்னரின் இறுதி சடங்கு ஒரு ஆண்டிற்கு பிறகு நடைபெற்றது.

தாய்லாந்து நாட்டின் மன்னராக இருந்து வந்த பூமிபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்13ம் தேதி உடல் நலகுறைவால், சிரிராஜ் மருத்துவமனையில் காலமானார். அப்போது அவருடைய வயது 88. ஆனால், அவருடைய இறுதி சடங்கு உடனே நடத்தப்படவில்லை.கடந்த ஒரு ஆண்டு காலமாக அவருடைய உடல், அரண்மனையின் துசிட் மகா பிரசாத் சிங்காசன அறையில் வைக்கப்படிருந்தது.

அவருடைய உடலை தகனம் செய்ய 164 அடி (49 மீட்டர்) உயரமான இடத்தை பத்து மாதங்களாக கட்டினர். அரண்மனையில் இருக்கும் அவருடைய உடலை சவபெட்டியில் வைத்து, பாங்காக் நகரில் உள்ள சனம லுங்கில் என்னும் இடத்தில், அவருக்காக கட்டப்பட்ட நினைவிடத்திற்கு எடுத்து செல்லப்படும். அவருக்கு கடைசி அஞ்சலி செலுத்திய பிறகு, அங்கிருந்து அவருடைய உடலை தகனம் செய்ய எடுத்து செல்லப்படும். மன்னரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது.

மன்னரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு நிற உடை உடுத்தி பங்கேற்றனர். மேலும், இங்கிலாந்தின் இளவரசர் ஆன்ட்ரு, ஸ்பெயின் நாட்டின் அரசி சோபியா, முன்னால் ஜெர்மன் நாட்டின் குடியரசு தலைவர் கிறிஸ்டியன் வோப், 16 அரச குடும்பத்தினர் மற்றும் 26 புகழ்பெற்ற பிரதிநிதிகள் ஆகியோர் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

கிங் பூமிபாலின் 65 வயதான மகனான மன்னர் மகா வாஜிரலங் கோர்கன் இறுதி சடலத்திற்கு எரியுற்றினார்.மன்னரின் சாம்பல் பெரிய அரண்மனை மற்றும் எமரால்டு புத்தர் கோவிளுக்கு எடுத்து செல்லப்படும்.

தந்தையின் இறுதி சடங்கிற்கு பிறகு, மன்னர் மகா வாஜிரலங் கோர்கனின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க