October 11, 2017
தண்டோரா குழு
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க பீர், பிராந்திகளின் விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு விலையை ரூ.12 வரை உயர்த்தவும் பீர் விலையை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.