November 2, 2017
தண்டோரா குழு
தென் தமிழகம் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யகூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்த வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.மேலும்,தென் தமிழக கடலோர மீனவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.