• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை – மோகன் நவாஸ் ஏ.டி.எஸ்.பி

September 22, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை எனவும்,வெளியாட்களின் நடமாட்டத்தை அறிந்து தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல் துறை சார்பில் செய்யப்பட்டு வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவாமல் இருக்க தமிழக சிறப்பு அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் இணைந்து பணியாற்றி வருவதாகவும்,இதற்கு முக்கியப் பங்காற்றி வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகக் கூறினார்.வெளியாட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக மலைவாழ் மக்களிடம் இருந்து,தகவல்கள் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.மேலும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் படிப்பிற்கு தேவையான வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்தார்.நக்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மலைவாழ் மக்கள் ஒத்துழைப்பாக உள்ளதாகவும்,காவல் துறையினரும் சோதனை சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.குறிப்பாக தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை என தெரிவித்தார்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க