• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசின் அலட்சியத்தால்,கலவர பூமியான தூத்துக்குடி மாவட்டம்

May 30, 2018 ஷாலினி சுப்ரமணியம்

ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது தான் நமது அரசியலமைப்புச்சடத்தின் கொள்கை.தூத்துக்குடியில் நடந்தது என்ன?இவைகளை எல்லாம் பாா்க்கும் போது அரசியலமைப்பின் சட்டங்கள்,காகிதத்தில் எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்களாக மட்டும் போகிவிடுமோ என்று நினைக்க தோன்றுகிறது.

கொலைகாரன்,கொள்ளைக்காரன்,தேசதுரோகி மற்றும் பச்சிளம் குழந்தையை கதற,கதற கற்பழித்தவன் எல்லாம் சொகுசாக சுத்திக்கொண்டிருக்கிறனர்,ஆனால் நியாயமாக அறவழியில் போராடும் ஏழை,எளிய மக்களோ நியமில்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டனரே இது தான் நீதியா?

1994 ம் ஆண்டு அடிக்கல் நாட்டி,1996 ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே,அங்கிருந்து வெளியேறும் சல்புரிக் ஆக்சைடு,கந்தக -டை-ஆக்சைடு போன்ற விஷவாயுக்கள் கண் எரிச்சல்,ஆஸ்துமா,தொண்டை கோளாறு போன்ற பல்வேறு விதமான நோய்கள் மக்களை தாக்க ஆரம்பித்தது.அப்போது ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இப்போது 13 உயிர்களை காவு வாங்கிய பிறகு தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.

இது போன்ற காப்பர் தொழிற்ச்சாலைகள் இயற்கை வளம் சுலபமாக பாதிக்கப்படாத இடங்களில் தான் இந்நிறுவனத்தை நிறுவ அனுமதி அளித்திருக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் எதையும் கண்டுகொள்ளமல் இருந்ததின் விளைவுவாக தான் இப்போது தூத்துக்குடி மாவட்டமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் எல்லாம் உடம்பிற்கு கேடு விளைவிக்க கூடிய தாமிரம்,குளோரைடு போன்ற தாதுக்கள் நிலத்தடிநீரில் அதிகரித்து காணப்படுகிறது.இவை மெதுவாக மனிதர்களையும்,விவசாய நிலங்களையும் விஷங்களாக மாற்றிவிட்டது.

சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்று கேட்ட தூத்துக்குடி மக்களின் சுவாசக்காற்றை நிறுத்தியதே நம் அரசாங்கத்தின் மிக பெரிய சாதனை!தமிழக அரசாங்கம் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவதும்,அதை அந்த நிர்வாகம் மீண்டும் திறப்பதும் தான் காலங்காலமாக நடந்து வருகிறது.இவற்றை காணும் போது அரசாங்கத்தின் வேலை என்ன மக்களின் நலனை பாதுகாப்பதற்கா?இல்லை கார்பரேட் நிறுவனங்களின் கைகூலியா? என்று நினைக்க தோன்றுகிறது.

இந்த ஸ்டெர்லைட் பிரச்சனை பற்றி சில இளைஞர்களிடம் கேட்ட போது அவர்களுக்கு இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை என்றே கூறலாம்.சிலர் சமுதாயத்தில் என்ன பிரச்சனை,என்ன நடக்கிறது,எதற்காக போராடுகிறோம்,என்று தெரியாமலேயே போரடிக்கொண்டிருந்தனர்.

இளைஞா்கள் தான் வருங்கால இந்தியாவில் புரட்சியாளர்கள்.அவர்களுக்கு எப்போதும் சமூகத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வு அவசியம்.இவர்களின் அறியாமையை பயன்படுத்தி சில அமைப்புகளும்,அரசியல் கட்சிகளும் இவர்களை தவறான வழியில் பயன்படுத்தி வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.சிலர் சமுகவலையதளங்களின் வரும் சில தவறான தகவல்களை ஆராய்ந்து பாா்க்காமல்,வதந்திகளை பரப்பி,வன்முறைக்கு வித்திடுகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில்இளைஞர்கள் களம் இறங்கி போராடியதனால் தான் அவர்களின் வலிமையை உணர முடிந்தது.ஆனால் இப்போது தூத்துக்குடியில் பல உயிர்கள் பறிபோனதற்கு பிறகு தான் விழிப்புணர்வு வந்து என்ன பயன்???

இளைஞர்களே! ஜல்லிக்கட்டு மற்றும் நெடுவாசல் போன்ற போராட்டங்களில் காட்டிய அக்கறையை,
ஏன் தங்கள் உரிமைக்காக போராடும் தூத்துக்குடி மக்களின் மீது காட்டவில்லை.தற்போது தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும் படிக்க