October 11, 2017
தண்டோரா குழு
டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு (அக்.9 வரை) 40 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் டெங்குகாய்ச்சலுக்கு இந்த ஆண்டு (அக்.9 வரை) 40 பேர் உயிரிழந்ததாகவும் 11,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், மலேரியாவுக்கு 8,524 பேர், சிக்கன் குனியாவுக்கு 85பேர், ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.