• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

November 2, 2018 தண்டோரா குழு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,தீபாவளியின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.இதையடுத்து,தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்க இரவு 2 மணிநேரம் மட்டும் அனுமதி என்ற உத்தரவில் திருத்தம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,தீபாவளி என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்,அதற்கு மேல் வெடிக்கக் கூடாது என்பதில் நீதிமன்றம் தீவிரமாக உள்ளது.அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தவிர சில அறிவுரைகளையும் மக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும்,குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்,அதிக ஒலி எழுப்பும்,தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்,மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்”. இவ்வாறு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க