• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மே 4 முதல் மே 13 வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

May 4, 2018 தண்டோரா குழு

தமிழகக் கடற்கரையோரம் பயணிக்கும் பலமான கடற்காற்று வெப்பச்சலனத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் மே 4 முதல் மே 13 வரை கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

டெல்டாவைப் பொருத்தவரை முற்பகல் உயரவேண்டிய வெப்பநிலையைத் தடுக்கும் வகையில் சிலநாட்கள் கடற்காற்று அதிராம்பட்டிணம்-கோடியக்கரை இடையே நுழைந்து செல்லும்.அன்று மேக மூட்டம் அதிகமாக இருக்கும்.இது வெப்பச்சலன மழையைத் தடுக்கும்.இதனால் டெல்டா பகுதியில் சில இடங்களில் கன மழைக்கும்,சில இடங்களில் மழை இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

மேலும் வேலூர்,மேற்கு,கிருஷ்ணகிரி,தர்மபுரி,திருவண்ணாமலை மேற்கு,விழுப்புரம் மேற்கு, நாமக்கல்,சேலம்,ஈரோடு,நீலகிரி,கோயம்புத்தூர்,கரூர்,திருச்சி,திண்டுக்கல்,தேனி,மதுரை, விருதுநகர்,திருநெல்வேலி மேற்கு ஆகிய மாவட்டப்பகுதிகளில் தினசரி மதியத்திற்கு மேல் மாலை, இரவு,நள்ளிரவு,அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் மழை பெய்து கொண்டிருக்கும்.

மேலும் படிக்க