• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு

November 4, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க என பல முனை போட்டிகள் நிலவி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு நடைபெறும் நவம்பர் 19-ம் தேதி மூன்று தொகுதிகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வியாழக்கிழமை (நவ 3) வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும் 19-ம் தேதி பொது விடுமுறை விடப்படுகிறது.

இந்த தொகுதிகளை உள்ளடக்கிய கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்கள் மற்றும் இந்த தொகுதிகளில் வாக்குரிமை உள்ள அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும்.

மூன்று தொகுதிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் விடுமுறை அளிப்பதில்லை என்கிற குற்றசாட்டு நிலவி வருகிறது. தேர்தல் நாளான்று விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க