September 28, 2016
தண்டோரா குழு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களும் போனஸ் பெறுவர்.
இதன் மூலம் குறைந்தபட்சமாக ஊழியர்கள்ரூ ரூ.8400ம், அதிகபட்சமாக ரூ.16,800 ம் போனசாக பெறுவார்கள். இதன் மூலம் 3,67,887 ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.மொத்தம் ரூ.476 கோடியே 71 லட்சம் போனசாக வழங்கப்பட உள்ளது.
மின்துறை,போக்குவரத்து துறை, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. வீட்டு வசதித்துறை, சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் கழக ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.