• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காட்டு யானை முன் செல்பி எடுத்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

October 26, 2017 தண்டோரா குழு

கோவை வனச்சரகம் வனப்பகுதியோரத்தில் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த இளைஞர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை வனச்சரகம் வனப்பகுதியோரத்தில் உள்ள காட்டுயானைகளை இளைஞர்கள் பலர் துன்புறுத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுரைபடி மாவட்ட வன அலுவலர் சதிஷ் மேற்பார்வையில் கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ரஞ்சித்குமார்,கார்த்திக், பிரகாஷ்குமார் ஆகியோர் காட்டுயானையின் அருகில் சென்று தங்கள் செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிந்தனர். இதையடுத்து, செல்போனில் படம் பிடித்து யானையை துன்புறுத்தியை கண்டுபிடித்த வனத்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூவருக்கு தலா ரூ.5000/- வீதம் ரூ15000/- இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேலும், இது போன்று வனவிலங்குகளை துன்புறுத்துவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க