October 11, 2017
தண்டோரா குழு
18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குழந்தை திருமணத்தை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள்,18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும்.மேலும்,திருமணமாகி 1 வருடத்திற்குள் பெண் புகாரளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை இன்று வழங்கி உள்ளது.