• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி குறித்து தவறான தகவல் அளித்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் – உச்ச நீதிமன்றம்

November 2, 2016 தண்டோரா குழு

வேட்பாளர்கள் தங்களின் கல்வித் தகுதி குறித்து தவறான தகவல் அளித்தால் அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மொய்ரங் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மைரம்பம் பிருதிவிராஜ் என்பவரும், காங்கிரஸ் கட்சி சார்பில் புக்ரம் சரத்சந்திர சிங் என்பவரும் போட்டியிட்டனர்.

இதில், பிருதிவிராஜ் வெற்றி பெற்றார். ஆனால், பிருதிவிராஜ் தனது வேட்புமனுவில், தான் எம்.பி.ஏ. பட்டதாரி என்று கூறியிருந்தது தவறானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் சரத்சந்திரசிங் வழக்கு தொடர்ந்தார்.

அதை ஏற்று, பிருதிவிராஜ் வெற்றி பெற்றது செல்லாது என்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பிருதிவிராஜ் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி, சரத்சந்திரசிங்கும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், வேட்பாளர்களின் கல்வித் தகுதியைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு வாக்காளரின் அடிப்படை உரிமை.

வேட்பாளர்கள், தங்களது கல்வித்தகுதி பற்றிய சரியான தகவலை அளிக்க வேண்டியது அவர்களது கடமை என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தவறான தகவலை அளித்தால், வேட்புமனுவை நிராகரிக்க முடியும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, தேர்தலில் வெற்றி பெற்ற பிருதிவிராஜ், மைசூரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கவில்லை என்பதில் மாறுபாடே இல்லை. அது எழுத்துப்பிழையால் நிகழ்ந்த தவறு என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது.

அந்த தவற்றை அவர் தற்போது ஒரு முறை மட்டும் செய்தார் என்பதற்கில்லை. தான் எம்.பி.ஏ. படித்துள்ளதாக, 2008-ம் ஆண்டிலிருந்தே அவர் கூறி வருகிறார். வேட்புமனுவில் அவர் கூறியுள்ள தகவல், பொய்ப் பிரகடனம் என்றே கருதப்படும்.

அது பெரிய தவறல்ல என்று கூறுவதையும் ஏற்க முடியாது. இருப்பினும், வெற்றி பெற்ற பிருதிவிராஜின் வேட்புமனு, தவறாக ஏற்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க