August 31, 2018
தண்டோரா குழு
மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரய பூவி’ (முத்துப் பூவை போன்ற பெண்) என்ற பாடலில் பிரியா வாரியர் சக மாணவரை பார்த்து கண் சிமிட்டும் காட்சி உள்ளது.அக்காட்சியில் கண்ணசைவு மூலம்சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பிரியா வாரியர் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றார்.
இதற்கிடையில்,அந்த பாடல் வரிகள் தங்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறி தெலுங்கானா,மகாராஷ்டிரா மாநிலங்களில் நடிகை பிரியா வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ப்ரியா வாரியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என உத்திரவிட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,திரைப்படத்தில் கேரளா நடிகை பிரியா வாரியார் கண் அடித்ததில் மத உணர்வு புண்படுத்தும்படி எதுவும் இல்லை,கண் அடித்ததில் தவறில்லை என்று பிரியா வாரியார் மீது தெலுங்கானா போலீஸ் பதிந்த வழக்கை ரத்து செய்து உத்திரவிட்டனர்.மேலும்,“ஒரு படத்தில் யாரோ பாட்டுப் பாடினால்,உடனே வேலை இல்லாமல் வந்து வழக்குத் தொடர்வதா?என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.