• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூடப் பழக்கத்தை நிறைவேற்ற பெற்ற மகனை விற்ற அன்னை

July 15, 2016 தண்டோரா குழு

பெற்ற குழந்தையை பலி கொடுத்து சாதுக்களைத் திருப்திப் படுத்திய பெற்றோரைப் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம்.

மூட நம்பிக்கையின் விளைவாக கடவுளைத் திருப்திப்படுத்த ஆடுகளை பலிகொடுக்க பெற்ற மகனை விற்ற அன்னையை இப்பொழுது பார்க்கிறோம்.

ஜார்கண்ட் ல் உள்ள பிரொர் பழங்குடியைச் சேர்ந்தவர் ஆனொ தேவி.ஆறு மாதங்களுக்கு முன் அவருடைய கணவன் இறந்து விட்டார். அவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன.தற்போது ஒரு சிசுவை பெற்றெடுத்துள்ளார்.

அவர்களது வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் இரு வெள்ளை ஆடுகளை பலிகொடுத்து வன தேவதையை த் திருப்திப் படுத்தவேண்டும்.இவ்வாறு செய்யத் தவறியவர்கள் தெய்வகுற்றத்திற்கு ஆளாவர் என்றும், சமூகத்தைவிட்டே ஒதுக்கி வைக்கப்படுவர் என்றும்,நாத்திகர் என்று முத்திரை குத்தப்படுவர் என்றும் பலரும் நம்புவதால் எப்பாடுபட்டேனும் சடங்குகளை நிறைவேற்ற முற்படுவர்.

அக்காரணங்களாலேயே தேவி தனது மூன்றே நாளான குழந்தையை ₹ 2000 க்கு கெடர் சஹு என்ற வியாபாரிக்கு விற்று அப்பணத்தைக்கொண்டு இரண்டு ஆடுகளை வாங்க தீர்மானித்துள்ளார்.

மேலும் தன்னுடைய நான் கு குழந்தைகளைப் பட்டினியின்றி வளர்த்துவதற்கே வருவாய் போதுமானதாக இல்லை என்றும், கூடுதலாக மற்றொரு குழந்தையை ப் பராமரிக்கத் தன்னால் முடியாது என்ற காரணத்தினாலும் தான் குழந்தையை விற்க முற்பட்டதாகக் கூறியுள்ளார்.குழந்தை வேறு இடத்தில் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணமே என்றும் தெரிவித்துள்ளார்.

விஷயமறிந்த கிராம நிர்வாகிகள் குழந்தையை வியாபாரி கெடர் சஹு விடமிருந்து திரும்பப் பெற்று தாய் தேவியிடமே ஒப்படைத்துள்ளனர்.

இதனால் முன்பைவிட பல சங்கடங்களுக்கு தேவி உள்ளாகியுள்ளார்.

முதலாவதாக குழந்தையை வளர்க்க போதுமான பணம் வேண்டும்.

இரண்டாவதாக குழந்தையை திருப்பிப் பெற்றுக்கொண்டுவிட்டதால் வியாபாரியான கெடர் சாஹு க்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

மூன்றாவதாக இன்றில்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக நேர்த்திக் கடனை செலுத்தியாக வேண்டும், ஏனெனில் அது பரம்பரை வழக்கம்.

தேவியின் துயரங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜைல் குமார் ராம் குழந்தையை தத்துக் கொடுப்பதற்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாகவும்,மற்றும் அவரது குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை போன்ற இன்றியமையாத அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் ,குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தருவதாகவும் வாக்களித்துள்ளார்.

மேலும் படிக்க