• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நவம்பர் 28 முழுக் கடையடைப்பு – தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை

November 26, 2016 தண்டோரா குழு

மத்திய அரசின் ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை (நவம்பர் 28) முழுக் கடை அடைப்பு செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை முடிவில், மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக வரும் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு சாமானிய மக்கள் கைகளில் பண நடமாட்டம் இருக்கக் கூடாது, சில்லறை வணிகர்களின் கடைகளில் வியாபாரம் நடக்கக் கூடாது என்ற உள்நோக்கம் கொண்டது.

ஆன்லைன் வணிகத்தை நோக்கி மக்களைத் திருப்பும் மோசடித் திட்டம். வணிகர் சங்க பேரவை சார்பில் ஏற்கனவே தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

ஆனால், வணிகர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை. உள்நாட்டு சில்லறை வணிகத்தை அழிக்கச் செய்யப்பட்டிருக்கும் இந்த மோசடியை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டங்கள் அறிவித்து உள்ளன.

இந்தப் போராட்டங்களுக்கு வணிகர்களின் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் முழுக் கடையடைப்பு செய்வது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த கடையடைப்பில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க