• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம் – கவிழ்ந்தது ராஜபக்சே அரசு

November 14, 2018 தண்டோரா குழு

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு,புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். எனினும்,பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது உறுதியானது.இதனால் தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா,திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால்,அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில்,நாடாளுமன்றம் இன்று கூடியது.மகிந்த ராஜபக்சே,ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.அப்போது, ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் ஜே.வி.பி கட்சி சார்பில் அளிக்கப்பட்டது.

அவை தொடங்கியது முதலே உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் ராஜபக்சே ஆவேசமாக அவையிலிருந்து வெளியேறினார்.கூச்சல்,குழப்பத்துக்கு இடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.வாக்கெடுப்புக்குப்பின் ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்தார்.

மேலும் படிக்க