• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போர்க்களமானது இலங்கை நாடாளுமன்றம் ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் மோதல்

November 15, 2018 தண்டோரா குழு

ராஜபக்‌சேவை பிரதமராக ஏற்க முடியாது என அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் மோதல் நிலவி வருகிறது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு,புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.இந்த சூழலில் அதிபர் சிறிசேனா,திடீரென்று பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.ஆனால், அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததோடு பொதுத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில்,நாடாளுமன்றம் நேற்று கூடியது.மகிந்த ராஜபக்சே,ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.அப்போது,
ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் ஜே.வி.பி கட்சி சார்பில் அளிக்கப்பட்டது.அவை தொடங்கியது முதலே உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் ராஜபக்சே ஆவேசமாக அவையிலிருந்து வெளியேறினார்.

கூச்சல்,குழப்பத்துக்கு இடையே நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.வாக்கெடுப்புக்குப்பின் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும்,அவர் பிரதமர் பதவிக்கு தகுதி இழந்ததாகவும் அவர் அறிவித்தார்.இலங்கை நாடாளுமன்றத்தில் குழப்பம் நிலவியதையடுத்து அவை இன்று வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,இன்று மீண்டும் இலங்கை நாடாளுமன்றம் கூடியது.

அப்போது,அவையில் பேசிய ராஜபக்சே,நேற்றைய தினம் நாடாளுமன்ற வரலாற்றில் கருப்பு தினம்.நான் அதிபராகவும்,பிரதமராகவும் பதவி வகித்துள்ளேன், ஆகவே,பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதல்ல.அதிருப்தியில் தான் நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என பேசிக்கொண்டிருந்த போது நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மற்றும் ரனில் ஆதரவு எம்பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும்,இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார்.அனைத்து எம்.பி-க்களும் எழுந்து போராட்டம் நடத்துவதால் இலங்கை நாடாளுமன்றமே போர்க்களமாக மாறியுள்ளது.உச்சகட்ட பரபரப்பினால் நாடாளுமன்றம் வரும் 21-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிபர் மைத்திரி பால சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க