• Download mobile app
22 Oct 2025, WednesdayEdition - 3542
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் குறித்து அவதூறு பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு

October 11, 2016 தண்டோரா குழு

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் சிலர் முதல்வர் உடல்நிலை குறித்து வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக அதிமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பியதாக 43 வழக்குகள் பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.அதைபோல் வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இக்குழு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிக்கும். மேலும், அவதூறு பரப்பியவர்களின் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் கணக்குகளை முடக்க அந்நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க