• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் இடம் மாற்றம்

November 26, 2016 தண்டோரா குழு

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று நடிகர் சங்கம் அறிவித்திருந்தது.

பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் அதே நாளில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இந்நிலையில், லயோலா கல்லூரி தங்கள் வளாகத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்த அளித்திருந்த அனுமதியை திடீரென ரத்து செய்துவிட்டது.

இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், “லயோலா கல்லூரியில் நடைபெறவதாக இருந்த சங்க பொதுக்குழுக் கூட்டம் போதிய பாதுகாப்பு காரணமாக தி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காவல் துறை பாதுகாப்புடன் நடைபெறும்” என கூறினார்.

நடிகர் சங்கத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை என்றும் திட்டமிட்டபடி அதே நேரத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் விஷால் கூறினார். பொதுக்குழுக் கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகரக் காவல்துறை இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.

மேலும் படிக்க