நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா விலங்குகள் நல வாரியத்தின் தூதராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலங்குகள் நலவாரிய நல்லெண்ண தூதர் பதவியை ரஜினியின் மகள் சவுந்தர்யா உடனடியாக ராஜினாமா செய்ய தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அவருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டங்களையும், உருவ படத்தையும் எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அதைபோல் தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணம் விலங்குகள் நல வாரியம் என வீர விளையாட்டு மீட்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தில் தன்னுடைய பணி என்ன என்பது குறித்து சவுந்தர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வாங்குது தான் என் பணி என்றும் கோச்சடையான் படத்தை இயக்கியதில் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல அனுபவம் உள்ளதால் தான் விலங்குகள் நலவாரியம் என்னை இப்பணியில் அமர்த்தியது என சவுந்தர்யா விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்