• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரோட்டாவை ஒதுக்கி வைத்த மாப்பிள்ளை.

June 20, 2016 தண்டோரா குழு

நட்பு என்றாலே பரோட்டாவும் மாப்பிள்ளையும் போல இருக்கனும் என கோலிவுட்டே பார்த்து வியந்து வந்த சூரி, விமல் நட்பில் யார் கண் விழுந்ததோ இப்போது இருவரும் தனித்தனி துருவங்களாக உள்ளனர். செம்மண் பூமி வாத்தியார் வேடத்தில் கலக்கிய விமல் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் படமும் அமையவில்லை.

நீண்ட இடைவேளைக்குப் பின் சூரியுடன் நடித்த மாப்பிள்ளை சிங்கம் ஹிட்டானது. அதிலும் இருவருக்கும் முட்டாள் மோதல் ஏற்பட்டதாக கிசு கிசு வெளியானது. ஆனாலும் அப்போது படம் ஓரளவு வெற்றிபெற்று தயாரிப்பாளர்கள் கல்லாவை நிறைத்ததால் அது குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் விமலின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியான பொது அவர்களுக்குள் இருந்த விரிசல்
வெளிச்சத்துக்கு வந்தது. பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கவுள்ள படத்தில் சூரிக்குப் பதில் ரோபோ சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறும்போது, மாப்பிள்ளை சிங்கம் படத்தில் சூரிக்கு தனக்கு இணையான காட்சிகள் இருக்கக்கூடாது என விமலும், இணையான காட்சிகள் வேண்டும் எனச் சூரியும் கேட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மனக்கசப்பு தான் தற்போது பூதாகரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

எது எப்படியோ, தனது உடல்நலன் கருதியே தற்போதெல்லாம் தான் பரோட்டா சாப்பிடுவது இல்லை என மாப்பிள்ளை கூறி வருவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க