• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உண்மையில் சூரி எத்தனைப் பரோட்டா சாப்பிட்டார் ?

June 2, 2016 தண்டோரா குழு

காமெடி நடிகர் சூரியைப் பிரபலப்படுத்திய பரோட்டா சீனில் எத்தனைப் பரோட்டா சாப்பிடீங்க என்ற கேள்விக்கு அவரே டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

டிவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் தனது ரசிகர்கள் மூலம் உரையாடிவருவது தற்போது ட்ரென்ட் ஆகிவருகிறது. அந்த வகையில் நடிகர் சூரி, டிவிட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு நேற்று பதில் அளித்தார்.வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் பிரபலம் ஆவர் தான் சூரி.

அப்படத்திலிருந்து பரோட்டா சூரியாக மாறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்து வருகிறார். இதற்காக #asksooriமற்றும் #askpushpapurushanஎன்ற பெயரில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டிருந்தன.

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் பலரும், சூரியுடன் நடித்த பிரபலங்கள் பலரும் பல சுவாரஸ்ய கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

இந்த நிலையில் டிவிட்டரில் ரசிகர் ஒருவர் வெண்ணிலாக் கபடிக் குழு படத்தில் இடம்பெறும் பிரபலமான பரோட்டா சாப்பிடும் சீனில் உண்மையில் நீங்கள் எத்தனைப் பரோட்டாக்கள் சாப்பிட்டீர்கள் என்ற கேட்டுள்ளார் அதற்குச் சூரி, ஒரு 17 இருக்கும் என்று கூறினார்.

மேலும் படிக்க