• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் – சோனியா காந்தி

September 29, 2016 தண்டோரா குழு

நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் நடைபெற்று வரும் ராணுவ தாக்குதல் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும்,இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருவதற்கு தங்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதை தற்பொழுதாவது பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் என காங்கிரஸ் நம்புகிறது என தெரிவித்தார்.

மேலும் உள்நாட்டில் உற்பத்தி ஆகும் தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க