October 28, 2017
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவுக் காரணமாக ,மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி,சில தினங்களுக்கு முன், தனது விடுமுறை நாட்களை செலவழிக்க சிம்லாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென்று உடல்நலகுறைவு ஏற்பட்டது. இதையடுத்து,ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை உடனடியாக டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.