• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10 ஆண்டுகளாக சூரிய மின்விளக்குகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை திமுக சார்பில் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு

November 13, 2017 தண்டோரா குழு

கடந்த பத்து ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து சூரியமின் விளக்குகள் மற்றும் சோலார்மின் விளக்குகள் சரியாகபராமரிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து திமுக சார்பில் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை திமுக சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார்.

அம்மனுவில், கோவை மாநகராட்சியில் உள்ள செம்மொழி பூங்காக்கள் சரியாக பராமரிக்கப்படாமலும் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்த பணியாளர்கள் நிறுத்தபட்டதால் பூங்காவில் தூய்மை பணிகள் நடைபெறாமலும் புதர்மண்டி பராமரிப்பற்று உள்ளது. இதனால் சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், கொசுக்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவும் கடந்த பத்துஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து.சூரிய ஒளிமின்விளக்குகள் சரியாக பராமரிக்கபடாமல் இருப்பதாகவும் இதே போல் பலகோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சோலார் மின்விளக்குகள் சரியாக பராமரிக்கபடாமல் எரியாத நிலையில் உள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் உடனடியாக மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி பகுதிகளில் முடிக்கபடாமல் உள்ள சாலைப்பணி,பாதாளசாக்கடை பணி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க