• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஸ்போர்ட் தர வரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

October 26, 2017 தண்டோரா குழு

சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் உலகிலேயே சக்தி வாய்ந்தது என்ற பெருமை அந்த நாடு பெற்றுள்ளது.

சர்வதேச நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசை பட்டியலை ஆர்டான் கேபிடல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.அதில், விசா இல்லாமலே பயணம் செய்ய அனுமதி வழங்கும் முதல் 10 பாஸ்போர்ட்டுகள் பட்டியலை கூறியுள்ளது. இந்த பட்டியலில் சிறிய நாடான சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்ததாக 158 புள்ளிகளுடன் ஜெர்மனி நாடு 2வது இடத்திலும், 157 புள்ளிகளுடன் தென் கொரியா மற்றும் ஸ்வீடன் நாடு 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 154 புள்ளிகள் பெற்று 18 நாடுகளுக்கு கீழ் பின்தங்கி உள்ளது. இந்தியா 51 புள்ளிகளுடன் 75வது இடத்தில் உள்ளது.ஆப்கானிஸ்தான் நாடு 22ம் இடத்திலும், ஈராக் மற்றும் பாகிஸ்தான் 26வது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க