• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகத்துக்கு இடம்

July 19, 2016 தண்டோரா குழு

வட இந்தியாவின் யூனியன் பிரதேசமான சண்டிகார், பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலத்திற்குத் தலைநகராக விளங்குகிறது. அந்நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ளது.

உலக அளவில் மிகவும் பழமையானதும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிக்கதுமான இடங்களை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. புகழ்பெற்ற இந்தப் பட்டியலில் இந்தியாவின் குதுப்மினார், மகாபோதி கோவில், ஊட்டி மலை ரெயில் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார சின்னங்கள் இடம் பெற்று உள்ளன.

மேலும், தற்போது இந்தப் பட்டியலில் நமது தேசத்தைச் சேர்ந்த மேலும் 3 இடங்கள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சண்டிகர் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன் ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ளது என்பது பெருமை குறிய விஷயமாகும்.

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்த உலக பாரம்பரியக்குழுவின் 40-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் தலைநகராக விளங்கும் சண்டிகாரில் உள்ள சட்டசபை கட்டிடம் புகழ்பெற்ற சிற்பி லி கொர்பசியரின் கை வண்ணத்துக்காக இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இதைப்போல உலகிலேயே 3வது உயரமான கஞ்சன்ஜங்கா சிகரத்தை உள்ளடக்கிய சிக்கிம் தேசிய பூங்கா பள்ளத்தாக்கு, பனிப்பாறைகள், ஏரிகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகும். பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க