• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சக்திமான் சிலைக்கும் அற்ப ஆயுசு

July 13, 2016 தண்டோரா குழு

டேராடூனில் சக்திமான் குதிரைக்கு வைத்த சிலை, திறப்பு விழாவிற்கு முன்பே அகற்றப்பட்டது.

உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பா.ஜா.காவைச் சேர்ந்த கணேஷ் ஜோஷி என்பவரால் தாக்கப்பட்ட 14 வயது காவல்துறைக் குதிரை சக்திமான் படுகாயமடைந்ததை பார்த்து நாடே அதிர்ச்சியடைந்தது. பிறகு அந்தக் குதிரைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதோடு, செயற்கைக் காலும் பொருத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி அந்தக் குதிரை ஏப்ரல் மாதம் உயிரிழந்தது. நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், சமூக ஆர்வலர்களும், பிராணிகள் நல அமைப்பினரும் தங்கள் கண்டனத்தைக் கடுமையாகத் தெரிவித்திருந்தனர்.

அதே சமயம் அந்தக் குதிரை அனைத்து அரசு மரியாதைகளோடும் அடக்கம் செய்யப்பட்டது.
அதன் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் டேராடூனில் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்டது. உத்திரகாண்டின் முதல் மந்திரி ஹரீஷ் ரவாத் கலந்துகொள்வதாக இருந்த இந்த நிகழ்ச்சியில், கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ள மறுத்ததுமின்றி, நினைவுச் சின்னத்தையும் அகற்றும் படி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மந்திரியின் இந்த நடவடிக்கைக்கு ஜோசியர்களின் அறிவுரையே காரணம் என்றும், குதிரை விஷயத்தில் விலகி இருக்கும் படி அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி நாட்டின் நலனுக்காக உயிர்நீத்த காவல் துறை வீரர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைக் காட்டிலும் அதிக அளவு குதிரைக்குக் கொடுக்கப்படுவது அரசியல் உள்நோக்கமே என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கண்டனங்களே காரணம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

மற்றுமொரு சிலை போலீஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை எடுப்பதா வேண்டாமா என்ற முடிவை வரப்போகும் அரசிடம் விட்டு விடப் போவதாக முதன் மந்திரி ரவாத் கூறியுள்ளார்.

இன்னும் ஒரு சில மாதங்களில் உத்திரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க