• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹிரோஷிமா அணுகுண்டைப் போன்று 4 மடங்கு வெப்பம் அதிகம். பூமி குறித்து விஞ்ஞானி எச்சரிக்கை

June 8, 2016 தண்டோரா குழு.

இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்காவின் ஹவாய் நாட்டில் உள்ள பியர்ல் ஹார்பர் என்னும் துறைமுகத்தை ஜப்பான் தேசம் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு தான் அமெரிக்க இரண்டாம் உலகப்போரில் கலந்து கொள்ள தன்னுடைய சம்மதத்தை தெரிவித்து அப்போரில் கலந்து கொண்டது. இந்தத் தாக்குதலினால் கோபம் கொண்ட அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷோமா நாகாசாகி என்னும் நகரங்களின் மேல் அணுகுண்டு தாக்குதலை நடத்தியது.

இன்று நாம் வாழும் நம் தாய் பூமியின் வெப்பம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போல நான்கு மடங்கு அதிகம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரித்துள்ளார். பூமியின் வெப்பம் குறித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த ஜான் குக் கூறுகையில், பூமி மீது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான கரியமில (கார்பன்-டை-ஆக்சைடு) வாயுவின் அடர்த்தி அதிகரித்து உள்ளது.

இதனால் பூமியில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப் போன்று நான்கு மடங்கு அதிகம்.
அதுவும் ஒவ்வொரு வினாடியும் புவி கடுமையான வெப்பத்திற்கு ஆட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

மேலும், இந்த அதிகப்படியான வெப்பம் 90 சதவீதம் கடலுக்குத்தான் செல்கிறது. இதுதான் நிலப்பகுதியில் ஏற்படும் தட்பவெப்ப நிலைகளைக் காட்டும் அளவைக் கருவியைப் போல் செயல்படுகிறது.

இதனால் நிலங்கள், பனி மலைகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது இவை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்தப் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்களே முக்கிய காரணம்.

கடந்த 20 ஆண்டுகளாக இதுகுறித்து நடைபெற்று வரும் ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால் புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க