• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் :உயர் நீதிமன்றம் உத்தரவு

October 6, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த செய்வாயன்று சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யபட்டதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மேலும், இம்மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டதையடுத்து இம்மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மாநில தேர்தல் ஆணையத்தின் மனு மீதான விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் படிக்க