• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் ஊழியர்களின் சுமை குறைக்க வங்கியின் புதுத் திட்டம்

July 15, 2016 தண்டோரா குழு

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தங்கள் வங்கியில் பணி புரியும் பெண் ஊழியர்களின் சுமையை சிறிது குறைக்க ஒரு சிறந்த திட்டத்தை அமுல் படுத்த உள்ளது.வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளைச் செய்யலாம் என்ற வசதியைக் கடைப்பிடிக்க தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சுமை இரண்டு மடங்கு.வீட்டையும் பராமரிக்க வேண்டும்,அலுவலகத்தையும் நடத்த வேண்டும்.இன்றைய சூழ்நிலையில் ஆண் பாலர்களுக்கும்,பெண்பாலர்களுக்கும் பொறுப்புக்களில் எந்தவித பாகுபாடும் இருப்பதில்லை.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களால் தங்கள் குழந்தைகளிடம் தனிக்கவனம் செலுத்த முடிவதில்லை.காப்பகத்தில் விடும் குழந்தைகளின் நலனும்,மனமும் கெட வாய்ப்புகள் அதிகம்.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தங்கள் வங்கி பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரிய ஆவன செய்ய தீவிரமாக முற்பட்டுள்ளது.

பளு காரணமாகவும்,குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் பெண்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்யத் தேவையில்லை என்பது இத்திட்டத்தின் நோக்கம்.தங்கள் அலுவலக பெண் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு வங்கி அளிக்கும் சலுகை .கிட்டத்தட்ட 45000 பெண் ஊழியர்களைக்கொண்ட இவ்வங்கி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பொதுத் துறை நிதி நிறுவனம் ஆகும்.

இந்தத் திட்டம் மார்ச் 2016ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று ஐ.சி.ஐ.சி .ஐ வங்கியின் நிர்வாக் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சண்டா கொச்ஹர் தலைமையில் தொடங்கப்பட்டது. டெல்லியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் இம்முயற்சி வெற்றி பெறத் தேவையான பங்களிப்பை நல்கியுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியையடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் இம்முறையை அமுல் படுத்த தொழில் நுட்ப நுணுக்கங்களை ஆராய்ந்து செயலாக்க முற்பட்டுள்ளது.

துவக்கநிலையில் வீட்டிலிருந்தபடியே ஒரு வருடம் பணிபுரிய பெண் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவர்.அதன்பின் தேவைக்கேற்ப நீட்டவோ ,குறைக்கவோ அனுமதிக்கப்படுவர்.இதுவரையில் 50 பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி பெற்றுள்ளனர். இன்னும் 100 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.இத்திட்டத்தின் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும் பெண்கள் ஒரு பாதுகாப்பான சூழ்நிலையில் பணிபுரிய முடியும். என்றும் கூறியுள்ளது.

அலுவலக சம்பந்தமாக பயணம் செய்கையில் தங்குமிடமும்,குழந்தைகளின் தேவைகளும் சேர்ந்தே கவனிக்கப்படும் என்பது இத்திட்டத்தின் சிறப்பு.

மேலும் படிக்க