• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல்

October 6, 2017 தண்டோரா குழு

சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலழிந்துவிட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.அவரை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பித்தார்.அவரது விண்ணப்பம் தொடர்பாக கர்நாடக சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.அப்போது, விண்ணப்பத்தில் சில ஆவணங்கள் இணைக்கப்படாததால் பரோல் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, புதிய மனுவை உரிய ஆவணங்களுடன் சசிகலா நேற்று தாக்கல் செய்தார்.சசிகலாவை பரோலில் அனுப்புவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை தமிழக காவல்துறையிடம் கேட்டது.தமிழக காவல் துறை சார்பில் ஆட்சேபனையில்லை என, தெரிவிக்கப்பட்டதுடன் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க