• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு

October 24, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்,முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என கூறப்பட்டது.எனினும் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2–ந்தேதி சர்கார் படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.இந்நிலையில்,சர்கார் படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் திரைக்கதை தன்னுடையது என்றும்,கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். ராஜேந்திரன் அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து வழக்கு நாளை விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க