• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் வெடிக்கும் சர்கார் பட பிரச்சனை….!

November 1, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில்,வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு,பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,புதிதாக ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது.அந்த சிக்கல் என்னவென்றால் சர்கார் படத்தில் விஜய் புகைபிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி,பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல்வேறு தரப்புகளில் இருந்து கிளம்பிய எதிர்ப்புகளை அடுத்து,போஸ்டர் திரும்பப் பெறப்பட்டது.தீபாவளிக்கு படம் வெளிவரவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ’சர்கார்’ பட விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கு தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால் படம் சொன்னபடி திரைக்கு வருமா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க