• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சச்சின் மகளை காதலிப்பதாக தொல்லை கொடுத்த நபர் கைது

January 8, 2018 தண்டோரா குழு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவரது மகள் சாரா டெண்டுல்கர். இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேப்குமார் மைட்டி (32).

இவர் சமீபத்தில் மும்பையில் உள்ள தனது சகோதரரை பார்க்கசென்ற அவர், தற்செயலாக சாராவையும் பார்த்துள்ளார். அப்போதிருந்து சாரா மீது காதல் கொண்ட அவர், எப்படியோ அவரின் கைபேசி எண்ணை கண்டுபிடித்து சாராவுக்கு 20க்கும் அதிகமான முறை தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி அவர் சாராவை கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சாரா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ரகசியமாக விசாரித்து வந்த போலீசார் சாராவுக்கு தொல்லை கொடுத்த அந்த நபரை மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சச்சின் மகளை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அதனால் தான் போன் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சாராவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார். எனினும், அவருடைய குடும்பத்தினர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க