• Download mobile app
02 Jun 2024, SundayEdition - 3035
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கால அவகாசம் கேட்டு தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு!

November 19, 2018 தண்டோரா குழு

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில்,10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை.எனினும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என்று மாநில அரசு உறுதிபட கூறியதுடன்,சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.இதனால் சபரிமலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில்,கோவில் மண்டல பூஜை,மகர விளக்கு பூஜைக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.இந்நிலையில் சபரிமலை கோவிலில் நேற்றிரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் சிலர் ஐயப்பா சரணம் என்ற பாடலை சத்தமாக பாடிக்கொண்டு நடைபந்தலிலேயே தங்கினர்.அவர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.ஆனால் பக்தர்கள் வெளியேறாததால் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்து அவர்கள் காவல் நிலையத்திலும் சரண கோஷம் மிட்டனர்.மேலும் போலீசாரின் இந்த கட்டுப்பாடுகளைக் கண்டித்துத் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இல்லத்தின் முன்பாக பாஜ.,மற்றும் ஆர்.எஸ்.எஸ் வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவத்தால் கேரளாவின் பல பகுதிகளில் பதற்றம் மிண்டும் நிலவுகிறது.

இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமத்தித்தால்,அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏதும் செய்யப்படவில்லை,அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று சபரிமலை ஐய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க