• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஷிய ராணுவ விமானம் கடலில் விழுந்து 92 பேர் பலி

December 26, 2016 எலிசபெத் டி சோஸா

ரஷ்ய ராணுவ விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள், ராணுவத்தின் இசைக் குழுவினர் 92 பேர் பலியாயினர்.

புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிரியாவில் உள்ள மேயின்மின் என்னும் விமான தளத்திலிருந்து TU-154 என்னும் அந்த ரஷ்ய விமானம் விமானம் 92 பயணிகளுடன் பயணமாகியது. அவர்களில் 9 பத்திரிகையாளர்களும் இருந்தனர்.

அந்த விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்தனர். இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கோனாஷேன்கோவ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) கூறியதாவது: TU-154 என்னும் விமானம் மாஸ்கோவில் இருந்து சிரியாவிற்கு ரஷ்ய நேரத்தின்படி காலை 5.20 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பி சரியாக 20 நிமிடங்களில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ரஷ்யாவின் கடலோர நகரமான சோச்சியில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருங்கடலில் விழுந்துள்ளது. அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர். 50 முதல் 70 மீட்டர் ஆழத்தில் அந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என்று தகவல் வந்துள்ளது. ஆனால் அது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை குறித்து உடனே விசாரணை மேற்கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார். இறந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

http://www.ndtv.com/world-news/russian-military-plane-with-over-90-passengers-missing-reports-1641564

மேலும் படிக்க