• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஷ்ய ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது!

October 27, 2017 தண்டோரா குழு

நார்வே அருகில் இருக்கும் ஸ்வல்பார்ட் கடல்பகுதியில்,8 பேர் பயணம் செய்த ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது.

சுற்றுலா இடத்திற்கு பெயர் போனது நார்வே.நார்வேயிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் ஸ்வால்பார்ட் என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த இடம் மனதை கவரும் மலை,கடல்,பனிக்கட்டி ஆகியவற்றிக்கு பெயர் போனது.

ஸ்வால்பார்ட் பகுதியில் இருந்து பிரமிட் என்னும் இடத்திற்கு, எட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு, ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக, அந்த ஹெலிகாப்டர் ஸ்வால்பார்ட் கடல்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மீட்பு துறை அதிகாரி கூறுகையில், “காலை 3.30 மணிக்கு பாரென்ட்ச்பெர்க் பகுதியில் இருந்து 2-3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ கட்டுபாட்டை இழக்கும்போது, உடனே விமானி ‘மே டே’ என்னும் அவசர சிக்னலை தருவது வழக்கம். ஆனால், அது போன்ற ஒரு சிக்னல் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம், ஒன்பது நபர்களுடன் பயணம் செய்த ரஷ்யன் Mi-8 ஹெலிகாப்டர் பாரென்ட்ச்பெர்க்கில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க