• Download mobile app
15 Jun 2024, SaturdayEdition - 3048
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ருக்சானாவின் கொலை வழக்கை சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றுமாறு பெற்றோர்கள் புகார்

October 27, 2017

ருக்சனாவின் கொலை வழக்கை சிறப்பு பிரிவு விசாரனைக்கு மாற்றுமாறு அவரது பெற்றோர்கள் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

கோவை சாய்பாபா காலணியை சேர்ந்த ஹைதர் அலி என்பவரது மகள் ருக்சானா. கடந்த 16 ம் தேதி காணாமல் போனார். இவரை பல இடங்களில் தேடிய பெற்றோர் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதற்கிடையே பவானி கல்லாறு அணை அருகே பாறை பொதும்பில் பிணமாக நிர்வாண நிலையில் ருக்ஸானா கண்டெடுக்கப்பட்டாள். போலீசாரின் தீவிர விசாரணையில் ருக்ஸானாபிரசாந்த் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ருக்சனாவின் கொலை வழக்கை சிறப்பு பிரிவு விசாரனைக்கு மாற்றுமாறும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தருமாறும் அவரது பெற்றோர்கள் கோவை மாநரக ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரில்,

எனது மகள் ருக்சானா கடந்த 16.10.2017 அன்று காலை 11 மணியளவில் தனது தோழியிடம் புத்தகம் வாங்கி வருவதாகச் சொல்லி சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் பல இடங்களில் தேடிப்பார்த்து எத்தகவலும் கிடைக்காததால் 18.10.2017 அன்று சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

மேற்படி புகார் அளித்தத்தின் பின்னிட்டும் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து காவல் நிலையத்தில் வலியுறுத்தி வந்ததின் அடிப்படையில் ருக்சானாவிற்கு கடைசியாக போன் செய்த நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க சாய்பாபா காலனி போலீசார் முயற்சி மேற்கொண்டு 22.10.2017 அன்று எனது மகளுக்கு போன் செய்திருந்த பிரசாந்த் என்பவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

மேற்படி பிரசாந்த் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தும் அதனை தொடர்ந்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பிரசாந்த் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.பிரசாந்தால் என் மகள் உயிருக்கு ஆபத்து இருந்த விவரத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் எனது மகள் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் வைத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.எனது மகளின் மரணம் குறித்து தவறான தகவல்களை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து இறந்து போன நபரை மீண்டும் மீண்டும் படுகொலை செய்கின்றனர்.

எனது மகள் மிகவும் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து வந்ததோடு எங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவே இருந்தார்.அவருக்கு எதிர் வரும் ஜனவரி 2018 ல் திருமணம் நடத்த உத்தேசித்து அதற்கான ஆயத்த பணிகளில் இருந்த நிலையில் மிகவும் திட்டமிட்டு எனது மகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த விதம் மேற்படி சம்பவத்தில் ஒரு நபர் மட்டும் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே காட்டுகிறது.எனவே, இந்த பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் உதவிய நபர்கள் ஆகியோரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வரையிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடாமல் இருக்கும் வகையிலும் எனது மகளின் கொலை வழக்கு சிறப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க