• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஷால் வேட்புமனு விவகாரத்தில் திடீர் திருப்பம்

December 8, 2017 தண்டோரா குழு

எங்களை யாரும் மிரட்டவில்லை என விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்த இருவரும் தேர்தல் அலுவலருக்கு முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஆர்.கே நகரில் போட்டியிடும் விஷால் மனு கையெழுத்து குளறுபடியால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில் தனக்கு ஆதரவாக முன்மொழிந்தவர்களை ஆளும் கட்சியினர் மிரட்டியதாக விஷால் கூறியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டிருந்தார்.

இந்நிலையில், எங்களை யாரும் மிரட்டவில்லை என விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கமளித்தனர். மேலும், விஷால் தங்கள் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், விஷாலை முன்மொழியவில்லை என்று சுமதி, தீபன் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.விஷால் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் படிக்க