• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் தேர்தலில் திடீர் திருப்பம் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்பு

December 5, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பமாக நடிகர் விஷாலின் வேட்பு மனு ஏற்க்கப்பட்டது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு விண்ணப்பப்படிவத்தில் உள்ள கையெழுத்தில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் விஷாலின் வேட்பு மனு முதலில் நிறுத்தி வைக்கபட்டது. பின்னர், மாலை மீண்டும் விஷாலின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, விஷாலை முன் மொழிந்து கையெழுத்திட்ட இருவரின் கையெழுத்து தவறாக இருந்ததால் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு குறித்து, தேர்தல் அலுவலர் வேலுச்சாமியுடன் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர், விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய விஷால் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்படுகின்றனர் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் கூறினார்.

இதையடுத்து, விஷாலை முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ ஆதாரத்தை வாட்ஸ்அப் மூலம் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஷால் சமர்ப்பித்தார். விஷால் அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் தேர்தல் அலுவலர் மனுவை ஏற்பதாக அறிவித்தார்.

மேலும் படிக்க