• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த தோனி.

June 23, 2016 தண்டோரா குழு

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை, இந்திய அணிக் கேப்டன் தோனி சமன் செய்துள்ளார்.

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கிலும், T20 போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.

ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது ட்வெண்டி ட்வெண்டி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தச் சாதனையை தோனி நிகழ்த்தினார். டெஸ்ட், ஒருநாள், ட்வெண்டி ட்வெண்டி என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை 324 ஆட்டங்களில் தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இச்சாதனையை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் புரிந்திருந்தார்.

இதன் மூலம் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை தோனி சமன் செய்துள்ளார்.

மேலும் படிக்க