• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா கைது

November 27, 2018 தண்டோரா குழு

கடந்த அக்டோபர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமாவை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.இதற்கடையில்,கடந்த அக்டோபரில் கோவில் சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்ட போது பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா உட்பட 8-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்தார்கள்.

ஆனால்,பக்தர்கள் தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்களைக் கீழே இறக்கக் கேரள அரசு உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து,பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமாவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொச்சியில் உள்ள போட் ரெட்டி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வரும் ரெஹானா பாத்திமா பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில்,சமீபத்தில் தனது ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில்,மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரெஹானா பாத்திமாக எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து,இன்று நண்பகல் 1 மணிக்கு பழவிரட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கிளைக்குச் சென்ற போலீஸார் ரெஹானா பாத்திமாவை கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து இன்று மாலைக்குள் ரெஹானா பாத்திமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,சிறையில் அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.இவர் மீது ஏற்கெனவே ஐபிசி 153(ஏ) பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க