• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ. 10 லட்சம் கோடிக்கு நோட்டுகள் அச்சிடவேண்டும் – ரிசர்வ் வங்கி

November 22, 2016 தண்டோரா குழு

இந்தியாவில் பணத் தட்டுபாட்டைப் போக்க 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட வேண்டிய தேவை இருக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி உயர் மதிப்பிலான 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

எனினும், இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கி, அஞ்சலகங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் மணிக்கணக்கில் பொதுமக்கள் நின்று வருகின்றனர்.

வணிகர்கள், சிறு, குறு தொழிற்சாலை நடத்துபவர்கள் என பலதரப்பு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் போதுமான அளவு இல்லாததால் வங்கிகள் முடங்கியுள்ளது. ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 மாத காலம் வரை ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரிசர்வ வங்கி செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளது. 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் மூலம் பெறப்பட்டுள்ளது.

இதில் 3 ஆயிரத்து 6 கோடி ரூபாய் மீண்டும் ஏ.டிஎம்.களில் எடுக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நேரடியாக மாறப்பட்டுள்ளது. இந்த கணக்குகளை வைத்து பார்க்கும் போது 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிட வேண்டியிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க