• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிவுக்கூர்மை பரிசோதனையில் சாதனைப் படைத்த நேஹா ராமு.

June 15, 2016 தண்டோரா குழு

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியான நேஹா ராமு கேட்டல் III பி தேர்வு எனப்படும் அறிவுக்கூர்மை பரிசோதனையில் 162 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளாள்.

அதாவது இவர் உலகின் மிகச் சிறந்த புத்திசாலிகளான, ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங், மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் ஆகியோரின் IQ திறனான 160ஐ விடத் தனது வயதில் வெளிக்காட்டக் கூடிய அதிகபட்ச உயரத்தை அடைந்ததால் அவர்களை விட இச்சிறுமி அறிவுக்கூர்மை உடையவளாகக் கணிக்கப்படுகின்றாள்.

மேலும் இங்கிலாந்தில் வசிக்கும் மாணவர்களில் மிகச் சிறப்பான எதிர்காலத்தை உடையவள் இவள் எனவும் அபிப்பிராயம் வெளியாகியுள்ளது. நேஹாவின் பெற்றோர் இருவரும் லண்டனில் வசித்துவரும் மருத்துவர்களாவார்கள். இந்தியாவில் பிறந்த நேஹாவை 7 வயதாயிருக்கும் போது பெற்றோர் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றனர்.

தான் கல்வி கற்ற பாடசாலையில் அதிக புள்ளிகளைப் பெற்ற நேஹா இங்கிலாந்து பள்ளியில் சேர்வதற்கான அனுமதிப் பரிசோதனையில் 280க்கு 280 புள்ளிகள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.

இதனையடுத்து இரு வருடங்களுக்குப் பின்னர் மென்சா (Mensa) எனப்படும் அதிகமான IQ அறிவுத்திறன் உடையவர்களுக்காக நடத்தப்பட்ட கேட்டல் III பி பரிசோதனையில் பங்குபற்றி 18 வயதுக்குக் குறைவானவர்கள் அடையக்கூடிய அதிக பட்ச புள்ளியான 162 ஐ பெற்று சாதனை படைத்தாள்.

இதைத் தொடர்ந்து நேஹா SAT எனப்படும் அமெரிக்க ஏ லெவல் பரீட்சையில் 800 க்கு 740 புள்ளிகள் பெற்றதுடன் இதன் மூலம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் உயர்படிப்பை மேற்கொள்ளும் விருப்பத்திலும் உள்ளார். நேஹா ஒரு தீவிர ஹரி பார்ட்டர் ரசிகை. அதுமட்டுமின்றி நீச்சலில் ஆர்வமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க