September 29, 2016
தண்டோரா குழு
சென்னை மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்ட ராம்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.பிரேத பரிசோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது, அதற்கு பதிலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை நியமித்து உத்தரவிட்டது.
மேலும் ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தங்களது தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவரது தந்தை பரமசிவம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததார். இன்று பரமசிவத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.