November 13, 2017
தண்டோரா குழு
ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளநோட்டுகள் மற்றும் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தின் மீது சிலர் எழுதுவதால் காந்தி புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது என்று கூறி ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.10000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.