• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறந்தவர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

September 8, 2016 தண்டோரா குழு

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவே பரவலாக பேசிவந்த சுவாதி கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று மீண்டும் ஓர் துயரச் சம்பவம் நடைபெற்றது.அந்த ரயில் இணையத்தில் இருந்து சற்று தொலைவில் ரயில் பாதை ஓரமாக நான்கு இளைஞர்கள் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியதில் அவர்கள் நால்வரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனாலும் அங்குச் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர்களது உடைமையில் பழைய துணிகள் மட்டுமே இருந்ததால் யார் எனக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அங்குச் சிதறிக்கிடந்த பொருட்களில் இருந்த ஒரு வாக்காளர் அடையாள அட்டையை வைத்து அவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

பின்னர் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் மொசைக் வேலை செய்வதற்காக வந்து நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்ததும் நேற்று வேலை இல்லாததால் வேறு இடத்திற்குச் செல்ல முயன்ற போது அனைவரும் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஒரிசா மாநிலத்தில் உள்ள அவர்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க