October 12, 2017
தண்டோரா குழு
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, தவறுதலாக பெண்கள் கழிவறைக்கு சென்றதால் தர்மசங்கடம் அடைந்தார்.
குஜராத் மாநிலத்திலுள்ள சோட்டா உதய்பூரில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இளைஞர்களிடையே கலந்துரையாடிகொண்டிருந்தார். அதன் பிறகு, அவசரமாக கழிவறைக்கு சென்றார். ஆண்களையும் பெண்களையும் வித்தியாசப்படுத்தும் விதமாக கழிவறையில் படங்கள் இல்லை. கழிவறைக்கு வெளியே ‘மகளிர் கழிவறை’என்று குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு இருந்தது. ராகுல்காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாததால், அவர் தவறுதலாக உள்ளே நுழைந்தார்.
அவர் தவறுதலாக மகளிர் கழிவறைக்கு சென்றதை கவனித்த அவருடைய காவலர்கள்,உடனே அவரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது.கழிவறைக்கு வெளியே எழும்பிய குழப்பல் சத்தம் கேட்டு, அங்கு வந்தவர்களை ராகுல்காந்தியின் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.
தவறுதலாக மகளிர் கழிவறைக்குள் சென்றுவிட்டு, வெளியே வந்தராகுல் காந்தியை பார்த்த மக்கள் சிரித்தனர். அந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் கைபேசியில் பதிவு செய்தனர்.